கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தால் தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டதால் கவனிக்க ஆளின்றி 16 வயதாகும் மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யான் செங் சிறு வயது முதலே மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது தந்தையும் சகோதரரும் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாரத்துக்கு பிறகு, புதன்கிழமையன்று, அவரது உடல் மீட்கப்பட்டது.
இந்த மரணத்தைத் தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர் மற்றும் ஹுவாஜியாஹே நகர மேயர் ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பராமரிக்க இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால், அவரைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் தவிக்கவிடப்பட்டார் யான் செங்.
- கொரோனா தாக்கம் குறித்து சீனாவிலிருந்து திரும்பிய தமிழர்கள் பேட்டி
- கொரோனா வைரஸ்: 8 நாட்களில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறக்கிறது சீனா
ஒரு வார காலத்தில் இரு முறை மட்டுமே அவருக்கு உணவு வழங்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது மகன் தனித்து விடப்பட்டிருப்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் அவரது தந்தை சீன சமூக ஊடகமான வெய்போவில், மகனைப் பராமரிக்குமாறு உதவி வேண்டி பதிவிட்டிருந்தார்.
இந்த சிறுவனின் நிலை குறித்த இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
கொரோனா வைரஸால் இதுவரை எத்தனை பேர் மரணம்
யான் செங்கின் குடும்பம் வசித்து வந்த ஹுவாஜியாஹே நகரம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக உள்ள ஹூபே மாகாணத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் இருவரை சீனாவில் 361 பேர் உயிரிழந்திருப்பதும், 17000க்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் சுமார் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.